நேபாள வெள்ளத்தில் இருந்து தப்பித்த 21 தமிழர்களுடன் அமைச்சர்கள் சந்திப்பு

21 தமிழர்களும் விமானம் மூலம் இரவு 8 மணிக்கு சென்னை அழைத்து வரப்பட உள்ளனர்.
நேபாள வெள்ளத்தில் இருந்து தப்பித்த 21 தமிழர்களுடன் அமைச்சர்கள் சந்திப்பு
Published on

புதுடெல்லி,

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை பத்திரமாக மீட்கும் நடவடிக்கைக்காக 4 தமிழக அமைச்சர்கள் டெல்லி சென்றுள்ளனர். இதற்கிடையே, நேபாள வெள்ளத்தில் சிக்கித்தவித்த 21 தமிழர்கள் தற்போது அங்கிருந்து பாதுகாப்பான முறையில் டெல்லி அழைத்துவரப்பட்டனர்.

இந்த நிலையில், டெல்லி வந்தடைந்த தமிழர்களை சந்திக்க தமிழக அமைச்சர்கள் விமான நிலையத்திற்கு வருகை தந்தனர். தமிழக அமைச்சர்களான ஆதவ் அர்ஜுனா, வினோத், தென்னரசு மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் 21 தமிழர்களை சந்தித்தனர்.

21 தமிழர்களிடமும் அமைச்சர்கள் நலம் விசாரித்தனர். அப்போது நேபாளத்தில் தாங்கள் சந்தித்த பிரச்சினைகள் குறித்து அமைச்சர்களிடம் 21 பேரும் தெரிவித்தனர். தற்போது 21 தமிழர்களும் விமானம் மூலம் இரவு 8 மணிக்கு சென்னை அழைத்து வரப்பட உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com