இந்தியா வரும் சர்வதேச பயணிகளுக்கு 7 நாள் கட்டாய தனிமை இல்லை - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்!

இந்தியா வரும் சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தளர்த்தியது.
இந்தியா வரும் சர்வதேச பயணிகளுக்கு 7 நாள் கட்டாய தனிமை இல்லை - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்!
Published on

புதுடெல்லி,

இந்தியா வரும் சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளை மத்திய சுகாதார அமைச்சகம் தளர்த்தியது . இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது,

2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சர்வதேச பயணிகளுக்கு 7 நாள் கட்டாய தனிமை இல்லை. கொரோனா தொற்று குறைந்து வருவதால் வெளிநாட்டு பயணிகளுக்கு இனி ஆர்டி-பிசிஆர் பரிசோதனையும் கட்டாயமில்லை.இம்மாதம் 14 ந்தேதி முதல் இந்த புதிய தளர்வு அமலுக்கு வருகிறது என சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒமைக்ரான் அதிகம் பரவக்கூடிய அபாயம் உள்ள நாடுகள் என பட்டியலிடப்பட்ட நாடுகள் குறித்த பட்டியலை நீக்கம் செய்துள்ளது சுகாதாரத்துறை. வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் 14 நாட்கள் சுயமாக தங்கள் உடல் நிலையை கவனித்துக்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக, வெளிநாடுகளிலிருந்து இந்திய விமானநிலையங்களில் வந்து இறங்கும் பயணிகள், 72 மணி நேரத்துக்கு முன்னர் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இப்போது பயணிகள் தாங்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை பதிவேற்றம் செய்து கொள்ளவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com