ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ரசாயன தாக்குதல் திட்டம் குறித்து மாநிலங்களுக்கு உள்துறை எச்சரிக்கை

ஐ.எஸ். ரசாயன தாக்குதல் திட்டம் குறித்து மாநில அரசுக்களுக்கு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. #ChemicalAttackPlans
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ரசாயன தாக்குதல் திட்டம் குறித்து மாநிலங்களுக்கு உள்துறை எச்சரிக்கை
Published on

புதுடெல்லி,

ரசாயன தாக்குதலை முன்னெடுக்க குஜராத்தை சேர்ந்த நிறுவனத்திடம் தாலியம் சல்பேட்டை வாங்குவதற்கு பயங்கரவாத அமைப்பு முயற்சி செய்யலாம் என உளவுத்துறை உள்ளீடுகள் கிடைத்ததும் உள்துறை அமைச்சகம் மாநில அரசுக்களுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது. பயங்கரவாத அமைப்பு துருக்கியை சேர்ந்த முகவரை ராசாயனத்தை வாங்குவதற்கு பணி அமர்த்தலாம் என உளவுத்துறை, மத்திய உள்துறையிடம் தெரிவித்து உள்ளது, இதுதொடர்பான கடித பரிமாற்றம் கிடைக்கப்பெற்று உள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.

இந்திய நிறுவனத்திடம் இருந்து தாலியம் சல்பேட்டை வாங்க ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் முயற்சி செய்யலாம். இவ்விவகாரத்தில் உண்மையை மறைக்கும் விதமாக கடை நிலைப்பணியை மேற்கொள்ள துருக்கியை சேர்ந்த இடைத்தரகர் முகமது யாஷிர் அல்-சுமாவை பணி அமர்த்தி உள்ளது, என அந்த தகவல் பறிமாற்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது என செய்தி வெளியாகி உள்ளது. தொழிற்சாலைகளில் பயன்படுத்து தாலியம் சல்பேட்டை உணவு மற்றும் தண்ணீரில் விஷமாகவும் பயன்படுத்தலாம் எனவும் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஈராக்கின் மொசூல் நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படைகள் போராடிய போது கிடைக்கப்பெற்ற ஆதாரங்கள் சிறைகளில் தாலியம் சல்பேட் பயக்கரவாதிகளால் சோதிக்கப்பட்டு உள்ளது என்பதை காட்டுகிறது.

எலி போன்ற விலங்கினங்களை கொல்ல தாலியம் சல்பேட் பயன்படுத்தப்படுகிறது, மனிதர்களுக்கு விஷம் வைக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது. ஐ.எஸ். கட்டுப்பாட்டில் இருந்த மொசூல் நகரை விடுவிக்க போர் நடைபெற்ற போது, கூட்டுப்படையினர் கைப்பற்றிய ஆதாரங்கள், உணவு மற்றும் குடிநீரில் தாலியம் சல்பேட் பயன்படுத்தப்பட்டு சோதிக்கப்பட்டது தெரியவந்து உள்ளது, என உளவுத்துறை எச்சரிக்கை குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய நிறுவனத்திடம் வாங்கும் தாலியம் சல்பேட்டை, ரசாயன தாக்குதலுக்கு ஐ.எஸ். பயன்படுத்தலாம். இவ்விவகாரம் தொடர்பாக விசாரணையையும் முன்னெடுக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் பிற இந்திய ரசாயன நிறுவனங்கள் ஐ.எஸ். பயங்கரவாத பிடியில் இருக்கும் பகுதியை சுற்றிய பகுதிகளுக்கு ரசாயனங்களை வழங்க தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com