மராட்டிய கவர்னரின் வாகன அணிவகுப்பில் விபத்து

ஹிங்கோலி நார்சி நாம்தேவ் பகுதிக்கு கவர்னர் சென்ற போது, அவரது வாகன அணிவகுப்பில் சென்ற 2 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.
மராட்டிய கவர்னரின் வாகன அணிவகுப்பில் விபத்து
Published on

மும்பை,

மராட்டிய அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி மரத்வாடா மண்டலத்தில் 3 நாள் சுற்றுப்பயணத்தை நேற்று முன்தினம் தொடங்கினார். இதில் ஹிங்கோலி மாவட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள நீர்வளத்திட்டங்கள் குறித்து மாவட்ட அதிகாரிகளுடன் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையே நேற்று ஹிங்கோலி நார்சி நாம்தேவ் பகுதிக்கு கவர்னர் சென்ற போது, அவரது வாகன அணிவகுப்பில் சென்ற 2 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. எனினும் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com