டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறிய தீ விபத்து!

டெல்லியில் கட்டுமான பணி நடைபெறும் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
Image Credit : PTI
Image Credit : PTI
Published on

புதுடெல்லி,

டெல்லியில் பல இடங்களில் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டு வரும் நிலையில், நேற்று மதியம் கட்டுமான பணி நடைபெறும் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. நாடாளுமன்ற கட்டிடத்தில் தீப்பிடித்ததை அறிந்ததும் அங்கு ஐந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன.

ஆனால் சிறிய அளவிலான விபத்து என்பதால் தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பே நாடாளுமன்றத்தில் உள்ள தீயணைப்பு ஊழியர்கள் தீயை அணைத்ததாக தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தார். தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com