16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி உள்பட 2 பேர் கைது


16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி உள்பட 2 பேர் கைது
x

சிறுமியின் காதலனும், திபன்கரும் நண்பர்கள் ஆவர்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் ஹூக்லி மாவட்டம் உத்தரபிரா பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி நேற்று தனது காதலனுடன் அப்பகுதியில் உள்ள கைவிடப்பட்ட தொழிற்சாலைக்கு சென்றுள்ளார்.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் இளைஞரணி நிர்வாகியான திபன்கர் அதிகாரி அங்கு வந்துள்ளார். சிறுமியின் காதலனும், திபன்கரும் நண்பர்கள் ஆவர்.

இந்நிலையில், அந்த தொழிற்சாலையில் வைத்து சிறுமியை அவரது காதலனும், திபன்கரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி போலீசில் புகார் அளித்துள்ளார். புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி திபன்கர், சிறுமியின் காதலனை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் இருவருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story