

ஐதராபாத்
ரச்சகொண்ட போலீசார் தெலுங்கானாவின் யாதத்ரி புவனகிரி மாவட்டத்தில் யாதகிரிகுட்டா நகரத்தில் பல்வேறு விபசார விடுதிகளில் இருந்த 11 சிறுமிகளை மீட்டனர். மேலும் இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பான சைல்டு லைன், விபசார தடுப்பு போலீஸ், லோக்கல் போலீஸ் ஆகிய குழுக்கள் இணைந்து உலக மனித கடத்தல் எதிர்ப்பு தினமான கடந்த 30 ந்தேதி யாதகிரிகுட்டா நகரில் மிகப்பெரிய சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 11 சிறுமிகள் மீட்கப்பட்டனர். இந்த சிறுமிகளில் 7 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் 4 பேர். மேலும் ஒரு சிறுமிக்கு மூன்றரை வயது தான் ஆகிறது என ரச்சகொண்டா போலீஸ் ஆணையர் மகேஷ் எம். பாக்வத் தெரிவித்து உள்ளார். மேலும் அவர் கூறும் போது ,
இப்போது மீட்கப்பட்ட ஒன்பது சிறுமிகள் கடத்தல்காரர்களின் பிள்ளைகள் அல்ல என்பது உறுதிப்படுத்தியுள்ளது. இந்த குழந்தைகள் எங்கிருந்தாவது கடத்திக் கொண்டு வரப்பட்டதா அல்லது இது காணாமல் போன குழந்தைகளா என்பதை சரிபார்க்க வேண்டும்.
எட்டு கடத்தல்காரர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட சிறுமிகள் கவுன்சிலிங்கு பிறகு புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
கடத்தல்காரர்கள் மீது மனித கடத்தல், சிறுமிகள் விற்பனை மற்றும் வாங்குதல், கற்பழிப்புக்கு உடந்தை, போஸ்கா சட்டம் உள்பட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என கூறினார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளவர்கள் கம்சாணி கல்யாணி ( 25) கம்சாணி அனிதா( 30) கம்சாணி சுசீலா(60) கம்சாணி நர்சிம்ஹா( 23) கம்சாணி சுருதி( 25) கம்சாணி சரிதா( 50) கம்சாணி வாணி( 28) மற்றும் கம்சாணி வம்சி (20). இவர்கள் அனைவரும் யாதத்ரி பாங்கிர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
விபசாரத்தில் ஈடுபடுத்த 5 வயது பெண் குழந்தைக்கு கடத்தல்காரர்கள் செக்ஸ் ஹார்மோன் ஊசி போட்டு உள்ளனர் என தெலுங்கான மீடியாக்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. குழந்தைகள் வளர்ச்சிக்காக ஊசி போட டாக்டர் சுவாமி என்பவர் பயன்படுத்தப்பட்டு உள்ளார் என போலீசார் அறிந்து கொண்டனர். இந்த ஹார்மோன் ஊசி போட கடத்தல்காரர்களிடம் டாக்டர் ஒரு ஊசிக்கு ரூ.25 ஆயிரம் வரை வாங்கி உள்ளார்.