சிறுபான்மையினரின் வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது: பிரகாஷ்ராஜ் குற்றச்சாட்டு

ஸ்.ஐ.ஆர் முறை ரத்து செய்யப்பட வேண்டும்; அதன்பின் ஞானேஷ் குமார் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.
 பிரகாஷ் ராஜ்
Published on: 

பெங்களூருவில் உள்ள சுதந்திர பூங்காவில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் நடிகரும் சமூக செயற்பாட்டாளருமான பிரகாஷ் ராஜ், யூடியூபர் துருவ் ரத்தீ, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். துருவ் ரத்தீ பெங்களூருவில் நடைபெறும் இந்த போராட்டத்தில் முதல் முறையாக பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின்போது வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படும் பெயர்களை மீண்டும் சேர்க்க வேண்டும், எஸ்.ஐ.ஆரு-க்கு முந்தைய வாக்காளர் பட்டியலை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டத்தில் பேசிய பிரகாஷ் ராஜ் கூறியதாவது: ஆதிவாசிகள், ஏழைகள், முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. அவர்களைக் கொல்ல முடியாது என்பதால், அவர்களின் வாக்குரிமையைப் பறித்துவிட்டீர்கள். எங்கள் போராட்டம் ஞானேஷ் குமாரின் ராஜினாமாவுக்கானது மட்டுமல்ல. அவர் சென்றால் வேறொருவர் வருவார். எஸ்.ஐ.ஆர் முறை ரத்து செய்யப்பட வேண்டும்; அதன்பின் ஞானேஷ் குமார் மீது விசாரணை நடத்தப்பட்டு, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com