ஹஜ் யாத்ரீகர்களை கடல் வழியாக அனுப்பும் திட்டம்: சிறுபான்மை விவகார அமைச்சகம் புதிய முயற்சி

ஹஜ் யாத்ரீகர்களை கடல் வழியாக அனுப்பும் திட்டத்தை புதுப்பிக்க சிறுபான்மை விவகார அமைச்சகம் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
ஹஜ் யாத்ரீகர்களை கடல் வழியாக அனுப்பும் திட்டம்: சிறுபான்மை விவகார அமைச்சகம் புதிய முயற்சி
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் இருந்து ஆண்டு தோறும் இஸ்லாமியர்கள் பலர் வான் வழி போக்குவரத்து மூலமாக ஹஜ் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஹஜ் யாத்ரீகர்களை கடல் வழியாக அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த, கப்பல் போக்குவரத்து அமைச்சகத்துடன் இணைந்து சிறுபான்மை விவகார அமைச்சகம் புதிய முயற்சியை மேற்கொள்ளும் என மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், இத்திட்டத்திற்காக விடப்பட்ட டெண்டரில் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து எங்களுக்கு கிடைத்த திட்டங்கள் பொருளாதார ரீதியாக சாத்தியப்படவில்லை. ஏனெனில் கடல் வழி பயணத்திற்கான கட்டணம் விமான கட்டணத்தை விட அதிகமாக இருந்தது.

கப்பல் போக்குவரத்து அமைச்சகத்திடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, கடல்வழி போக்குவரத்திற்கான வழித்தடங்களை முடிவு செய்து, ஹஜ் யாத்ரீகர்களை கடல் வழியாக அனுப்பும் திட்டம் கூடிய விரைவில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

ஹஜ் யாத்ரீகர்களை அழைத்துச் செல்லும் எம்.வி.அக்பரி என்ற கப்பல் 1995 இல் பழுதடைந்து பயன்படுத்த தகுதியற்றதாக மாறியது. அதனையடுத்து ஹஜ் யாத்திரைக்கான கடல் வழி போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடல் வழியை புதுப்பிப்பதற்கான யோசனை சிறுபான்மை விவகார அமைச்சகத்தால் கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com