வளர்ச்சிப் பணிகளை பா.ஜ.க. செய்தாலும் காங்கிரசுக்கு வாக்களித்த சிறுபான்மை மக்கள்.. அசாம் முதல்-மந்திரி பேச்சு

இந்துக்கள் வகுப்புவாதத்தில் ஈடுபடுவதில்லை என்பது இந்தத் தேர்தலில் நிரூபிக்கப்பட்டுள்ளது என அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.
Himanta Biswa Sarma dissatisfaction with minorities
Published on

கவுகாத்தி:

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அசாமில் உள்ள 14 மக்களவை தொகுதிகளில் பா.ஜ.க. 9 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகளான அசாம் கண பரிஷத், ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் ஆகியவை தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. மீதமுள்ள 3 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றது.

இந்நிலையில், பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்களுக்கான பாராட்டு விழாவில் மாநில முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கலந்துகொண்டு பேசியதாவது:-

அசாமில் உள்ள இந்து சமூகத்தினர் திருப்திப்படுத்தும் அரசியல் செய்யவில்லை என்பதை பெருமையுடன் கூறமுடியும். நாடாளுமன்ற தேர்தலில் இந்துக்கள் தகுதியின் அடிப்படையில் வாக்களித்துள்ளனர். ஆனால், ஒரு குறிப்பிட்ட சமூகம் தந்திரமாக வாக்களித்துள்ளது. தங்கள் பகுதியில் எவ்வளவு வளர்ச்சி ஏற்பட்டாலும், அந்தச் சமூகம் 100 சதவீத வாக்குகளை காங்கிரசுக்கே அளித்துள்ளது.

அதேபோல், இந்துக்கள் வகுப்புவாதத்தில் ஈடுபடுவதில்லை என்பது இந்தத் தேர்தலில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அசாமில் ஒரு மதத்தைத் தவிர வேறு எந்த மதமும் வகுப்புவாதத்தில் ஈடுபடுவதில்லை. இந்தத் தேர்தல் அதற்கு சான்று.

அசாமில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் காலத்தில் சிறுபான்மை சமூகத்தினர் வறுமையில் வாடினர். சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில் சரியான சாலைகளோ, மின்சார வசதியா இல்லை. விலைவாசி உயர்வு பற்றிய சிந்தனை இல்லை.

ஆனால், அதிகாரிகள் என்ன பணிகள் செய்தாலும், சிறுபான்மையினர் காங்கிரசுக்கு வாக்களிக்கிறார்கள். இந்த முறையும் அவ்வாறே வாக்களித்துள்ளனர்.

இந்து சமுதாயத்திற்கு ஆதரவாக நின்றதால் பா.ஜ.க. சில இடங்களில் வாக்குகளை இழந்துவிட்டது. வங்கதேசத்தை பூர்வீகமாக கொண்ட சிறுபான்மை மக்களின் வாக்குச்சாவடிகளில், கரீம்கஞ்ச் நீங்கலாக 100-க்கு 99 சதவீத வாக்குகள் காங்கிரசுக்கு கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com