அதிசயம் ஆனால் உண்மை... கோவிஷீல்டு தடுப்பூசியால் பேசும் திறன் பெற்ற நபர்

4 ஆண்டுகளுக்கு முன் இழந்த பேச்சு திறனை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திய பின் அதிசயத்தக்க வகையில் ஒருவர் திரும்ப பெற்றுள்ளார்.
அதிசயம் ஆனால் உண்மை... கோவிஷீல்டு தடுப்பூசியால் பேசும் திறன் பெற்ற நபர்
Published on

பொக்காரோ,

ஜார்க்கண்டின் பொக்காரோ நகரில் சால்காடி கிராமத்தில் வசித்து வருபவர் துலார்சந்த் முண்டா (வயது 55). 4 ஆண்டுகளுக்கு முன் விபத்து ஒன்றில் சிக்கி முடங்கி போனார். அதனுடன், பேசும் திறனையும் அவர் இழந்து விட்டார். ரூ.4 லட்சம் செலவழித்தும் பலனில்லை.

இந்த நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திய பின்னர் அதிசயம் ஒன்று நடந்துள்ளது. துலார்சந்த் எழுந்து நிற்கிறார். நடந்து செல்கிறார். எனது குரல் எனக்கு கிடைத்து விட்டது என மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

இதனால் சுகாதார அதிகாரிகள் ஆச்சரியத்தில் மூழ்கி போனார்கள். இதுபற்றி மருத்துவர் ஜிதேந்திரா குமார் கூறும்போது, இதனை கண்டு ஆச்சரியம் அடைந்தேன். மருத்துவ குழு ஒன்றை அமைத்து அவரது மருத்துவ வரலாற்றை ஆய்வு செய்ய வேண்டும்.

சில நாட்களில் பழைய நிலையில் இருந்து மீண்டால் அதுபற்றி புரிந்து கொள்ள முடியும். ஆனால், 4 ஆண்டு காலத்திற்கு பின் தடுப்பூசியால், இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறார் என்பது நம்ப முடியாதது என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com