

ஐதராபாத்,
தெலுங்கானாவில் மஹபூப்நகர் மாவட்டத்தில் திவிட்டிபள்ளி ரெயில் நிலையம் அருகே யஸ்வந்த்பூரில் இருந்து கச்சிகுடா செல்லும் எக்ஸ்பிரெஸ் ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது.
இந்த ரெயிலை சிக்னல்களை உடைத்து மர்ம நபர்கள் நிறுத்தி உள்ளனர். அதன்பின் அவர்கள் ஜன்னல்களை நோக்கி கற்களை வீசி எறிந்துள்ளனர். ரெயில் பயணிகள் 6 பேரிடம் இருந்து தங்க சங்கிலிகள் மற்றும் மங்கல நாண்கள் என 300 கிராம் தங்க நகைகளை அவர்கள் பறித்தனர். ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் சில செல்போன்களையும் அவர்கள் பறித்து சென்றுள்ளனர்.
இதனை அடுத்து கச்சிகுடா ரெயில்வே நிலையத்தில் பயணிகள் அளித்த புகாரின்பேரில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.