உலக அழகி போட்டியில் இருந்து இங்கிலாந்து அழகி திடீர் விலகல்


உலக அழகி போட்டியில் இருந்து இங்கிலாந்து அழகி திடீர் விலகல்
x

நடப்பு ஆண்டுக்கான உலக அழகி போட்டி வருகிற 31-ந் தேதி நடைபெற உள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடப்பு ஆண்டுக்கான உலக அழகிப்போட்டி நடந்து வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்று உள்ளனர்.

மாநிலம் முழுவதும் உள்ள கோவில்கள், சுற்றுலாத்தலங்களுக்கு செல்லும் அழகிகள், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். இறுதிப்போட்டி வருகிற 31-ந்தேதி நடைபெற உள்ளது.

இங்கிலாந்தில் இருந்து மில்லா மாகி என்ற அழகி உலக அழகிப்போட்டியில் கலந்துகொண்டார். தொடக்கத்தில் ஆர்வமாக பங்கேற்ற இவர், திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். தெலுங்கானாவில் கோடை வெயில் கொளுத்தி வருவதால், அவர் சோர்வடைந்ததாக தெரிகிறது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். தொடர்ந்து உடல்நிலை மோசமானதால் இங்கிலாந்துக்கே திரும்பி சென்று விட்டார்.

1 More update

Next Story