மிசோரத்தின் அதிக வயதான பெண்மணி காலமானார்

பமியங் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மிசோரத்தின் அதிக வயதான பெண்மணி காலமானார்
Published on

அய்சோல்,

மிசோரம் மாநிலம் லாங்தலாய் மாவட்டம் பங்குவா கிராமத்தை சேர்ந்தவர் பமியங் (வயது 117). இவர் 1908ம் ஆண்டு பிறந்தார்.

பமியங் மிசோரம் மாநிலத்தின் அதிக வயதான பெண்மணியாக திகழ்ந்தார். பமியங்கிற்கு மொத்தம் 8 பிள்ளைகள், 51 பேரன் - பேத்திகள், 122 கொள்ளுப்பேரன் - கொள்ளுப்பேத்திகள், 22 எள்ளுப்பேரன் - எள்ளுப்பேத்திகள் உள்ளனர்.

இந்நிலையில், மிசோரத்தின் அதிக வயதான பெண்மணியாக திகழ்ந்த பமியங் வயது மூப்பு காரணமாக நேற்று அவரது வீட்டில் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com