மசூதிகளில் இருந்து ஒலி பெருக்கிகளை நீக்க வேண்டும்..!! - ராஜ் தாக்கரே

மும்பையில் நேற்று நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய ராஜ் தாக்கரே, மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை நீக்குமாறு மராட்டிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
Image Courtesy: ANI
Image Courtesy: ANI
Published on

மும்பை,

மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சியின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், மசூதிகளில் ஒலிபெருக்கிகள் ஏன் அதிக ஒலியில் ஒலிக்கப்படுகின்றன..? இதை நிறுத்தாவிட்டால், மசூதிகளுக்கு வெளியே அதிக ஒலியில் ஹனுமான் சாலிசாவை ஒலிபெருக்கிகள் ஒலிக்கும்.

நான் எந்த குறிப்பிட்ட மதத்திற்கும் எதிரானவன் அல்ல. எனது சொந்த மதத்தில் பிரார்த்தனை செய்வதற்கு நான் பெருமைப்படுகிறேன் என்று அவர் கூறினார்.

மேலும் தனது பிரிந்த சகோதரரும், மராட்டிய மாநில முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரேவைத் தாக்கிய ராஜ் தாக்கரே, தேர்தலின் போது தான் எதிர்த்த சக்திகளுடன் கூட்டணி வைத்து வாக்காளர்களின் நம்பிக்கைக்கு முதல்-மந்திரி துரோகம் இழைத்துவிட்டார் என்றார்.

மராட்டியத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லை. தேவேந்திர பட்னாவிசை முதல்-மந்திரியாக பிரதமர் மோடி குறிப்பிட்டபோது உத்தவ் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகுதான், அவருக்கு முதல்-மந்திரியாகும் எண்ணம் வந்தது. எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சி உருவானதில் இருந்து மாநிலத்தில் சாதி அடிப்படையிலான வெறுப்பை பரப்பி வருகிறது. இன்றைக்கு மாநிலத்தில் சாதி பிரச்சனைகளுக்காக மக்கள் போராடுகிறார்கள். அதிலிருந்து நாம் எப்போது வெளியேறி இந்துக்களாக மாறுவோம்..?

முஸ்லிம் வீடுகளில் உள்ள மதராசாக்கள் மீது சோதனை நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொள்கிறேன். இந்த வீடுகளில் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் வசித்து வருகின்றனர். அங்கு என்ன நடக்கிறது என்பது மும்பை போலீசாருக்கு தெரியும்... நமது எம்.எல்.ஏ.க்கள் அவர்களை வாக்கு வங்கிக்காக பயன்படுத்துகிறார்கள், அப்படிப்பட்டவர்களிடம் ஆதார் கார்டு கூட இல்லை, ஆனால் எம்.எல்.ஏ.க்கள் அவற்றை உருவாக்குகிறார்கள் என்று ராஜ்தாக்ரே தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com