கும்பல் தாக்குதலில் தப்பிக்க காவல் நிலையத்திற்குள் தஞ்சம் புகுந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.

கும்பல் தாக்குதலில் இருந்து தப்பிக்க திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் காவல் நிலையத்திற்குள் தஞ்சம் புகுந்த சம்பவம் நடந்துள்ளது.
கும்பல் தாக்குதலில் தப்பிக்க காவல் நிலையத்திற்குள் தஞ்சம் புகுந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.
Published on

மேற்கு வங்காளத்தில் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவர் சுப்ரபாத் பத்யபியால். கடந்த வியாழ கிழமை இரவு இவரது வீட்டுக்குள் புகுந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை தேடியது. அவர் வீட்டில் இல்லாத நிலையில் அவரின் 22 வயது மகளை கட்டாயப்படுத்தி காரில் ஏற்றி கடத்தி சென்றது.

இந்த சம்பவத்தில் கடந்த வெள்ளி கிழமை சந்தேக அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஆனால் தொடர்ந்து அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் பத்யபியாலின் மகளை கண்டுபிடித்து தரும்படி போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. மணிருல் இஸ்லாம் சென்ற வாகனத்தின் மீது போராட்ட கும்பல் தாக்குதல் நடத்தியது. கல்வீச்சிலும் ஈடுபட்டது.

இதனால் அவரது பாதுகாவலர்கள் அவரை காவல் நிலையத்திற்குள் கொண்டு சென்று சேர்த்து பாதுகாத்தனர். அங்கும் ஒரு கும்பல் வந்து கல்வீச்சில் ஈடுபட்டது. இதன்பின் காவல் துறையினர் தடியடி நடத்தி கும்பலை கலைத்தனர்.

இதனை தொடர்ந்து இஸ்லாம், பத்யபியாலின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரிடம் பேசியுள்ளார். அவரது மகளை தேடி கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர் என அவர்களிடம் தெரிவித்துள்ளார்.

பத்யபியால் பாரதீய ஜனதாவில் கடந்த 5 மாதங்களுக்கு முன் சேர்ந்துள்ளார். அதற்கு முன் அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்துள்ளார். அங்கு சேருவதற்கு முன் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியில் இருந்தவர். இந்த கடத்தலுக்கு அரசியல் பின்னணி இல்லை என போலீசார் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com