விவசாய நிலங்களில் மரம் வெட்டுவதற்கான மாதிரி விதிகள் - மத்திய அரசு வெளியீடு

விவசாய நிலங்களில் மரம் வெட்டுவதற்கான மாதிரி விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
விவசாய நிலங்களில் மரம் வெட்டுவதற்கான மாதிரி விதிகள் - மத்திய அரசு வெளியீடு
Published on

புதுடெல்லி,

வேளாண் காடு வளர்ப்பை மத்திய அரசு ஊக்குவித்து வரும் நிலையில், விவசாய நிலங்களில் உள்ள மரம் வெட்டுவதற்கு அனுமதி பெறுவதற்கான மாதிரி விதிகளை அரசு வெளியிட்டு உள்ளது. இது தொடர்பாக கடந்த 19-ந்தேதி அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது.

அரசின் மாதிரி விதிகளின்படி, 10-க்கு மேற்பட்ட மரங்களை கொண்ட நிலத்தில் இருந்து மரம் வெட்டுவதாக இருந்தால் அது குறித்து என்.டி.எம்.எஸ். இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

10-க்கு மேற்பட்ட மரங்களை வெட்டுவதாக இருந்தால், மரங்களின் புகைப்படம், மரத்தை வெட்டுவதற்கு திட்டமிட்டுள்ள தேதியுடன் விண்ணப்பிக்க வேண்டும். மரம் வெட்டிய பிறகும் அவற்றின் அடிப்புறத்தையும் புகைப்படம் எடுத்து பதிவேற்ற வேண்டும்.அதன்படி சம்பந்தப்பட்ட துறையினர் அதிகாரி ஒருவரை அனுப்பி ஆய்வு செய்து தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு மத்திய அரசின் மாதிரி விதிகளில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com