இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட நவீன துப்பாக்கிகள் பஞ்சாபில் பறிமுதல் - 16 பேர் கைது

இஸ்ரேலிய துப்பாக்கிகள் பஞ்சாபில் பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதல் முறை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட நவீன துப்பாக்கிகள் பஞ்சாபில் பறிமுதல் - 16 பேர் கைது
Published on: 

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் கோட் கல்சா பகுதியில், ரவுடி கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சொந்தமான இடங்களில் நேற்று அமிர்தசரஸ் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது ஏராளமான ஆயுதங்களும், போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

நவீன துப்பாக்கிகள்

இதில் குறிப்பாக இஸ்ரேல் நாட்டில் தயாரிக்கப்பட்ட யூ.இசட்.ஐ. 9 மி.மீ. நவீன இயந்திர துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், இத்தகைய துப்பாக்கிகள் பஞ்சாபில் பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதல் முறை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

16 பேர் கைது

இது தவிர 5 கைத்துப்பாக்கிகள், 26 கேட்ரிஜ்கள், வெடிமருந்துகள் மற்றும் 34 கிலோ ஹெராயின் போதைப்பொருள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இந்த ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை வைத்திருந்தது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுத கடத்தல்

இவர்களில் சிலர் சர்வதேச ஆயுத கடத்தல் கும்பல்களுடன் நேரடி தொடர்பில் இருந்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து ஆயுதங்களை கடத்தி, உள்ளூர் ரவுடி கும்பல்களுக்கு இவர்கள் ஆயுத சப்ளை செய்து வந்துள்ளனர். தற்போது கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X