குஜராத்தில் நவீன திருட்டு: கூகுள் மேப் மூலம் கோவில் நகைகளை திருடிய கும்பல் கைது

குஜராத்தில் உள்ள கோடியார் மாதாஜி மற்றும் ராம்தேவ்பீர் கோவில்களில் இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத்தில் நவீன திருட்டு: கூகுள் மேப் மூலம் கோவில் நகைகளை திருடிய கும்பல் கைது
Published on

அகமதாபாத்,

குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தின் ராபர் தாலுகாவில் உள்ள கேடி கிராமத்தை சேர்ந்தவர். பஞ்ச கோலி மற்றும் ஜாவேத் கஞ்சி அதே ராபர் தாலுகாவில் உள்ள உமையா கிராமத்தை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.

குஜராத்தின் கிழக்கு கட்ச் மாவட்டத்தில் மோதி ஹமீர்பார் கிராமத்தில், இரண்டு கோவில்களில் கொள்ளை நடந்தது. அந்த திருட்டு கும்பலை அடேசர் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் அடேசர்-சான்வா சந்திப்பு அருகே திருட்டு பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் நிற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் சந்தேகப்படும் நபர்களை கண்காணித்து வந்தனர். திருடிய நகைகளை விற்க முயன்ற போது திருடர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களை சோதனை செய்த போது, ​​திருடப்பட்ட பொருட்கள் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் மோதி ஹமீர்பார் கிராமத்தில் உள்ள கோடியார் மாதாஜி மற்றும் ராம்தேவ்பீர் கோவில்களில் திருடியது கோலி மற்றும் அவரது நண்பன் கஞ்சி என போலீசார் தெரிவித்தனர்.

திருடர்கள் கோவில்களை அடையளம் காணவும் திருட்டை நடத்துவதற்கு கூகுள் மேப்பை பயன்படுத்தியது தெரிய வந்தது மேலும் இந்த திருடர்களின் செயல்முறையை கண்ட போலீசாரே அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நவின திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com