பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு: பிரதமர் மோடி பெருமிதம்

கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்து 11 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. கடந்த வருடம் ஜூன் மாதம் 9ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர் பிரதமராக மூன்றாவது முறையாகப் பதவியேற்றார். நேற்றுடன் மூன்றாவது முறை பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து, தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி, ஆட்சி நிர்வாகம் குறித்து, பல்வேறு துறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பாகவும் பதிவிட்டுள்ளர். பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: -
கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.பாதுகாப்பு துறையை நவீனமாக்குவதும், தன்னிறைவு பெறுவதிலும் முழுமையான கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவை வலிமையாக்கும் உறுதியுடன் இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story