தொடர்ந்து 3-வது முறையாக மோடி பிரதமர் ஆனார்- 71 மத்திய மந்திரிகள் பதவி ஏற்பு


தொடர்ந்து 3-வது முறையாக மோடி பிரதமர் ஆனார்- 71 மத்திய மந்திரிகள் பதவி ஏற்பு
x
தினத்தந்தி 10 Jun 2024 1:09 AM GMT (Updated: 10 Jun 2024 4:29 AM GMT)

பா.ஜனதா தனித்து 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. எனவே பா.ஜனதா, இந்த முறை கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.

புதுடெல்லி,

"நாட்டின் பிரதமராக தொடர்ந்து 3-வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்களாக 71 பேர் பதவியேற்றுக்கொண்டனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் அதிகமாக நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சி இரவு 10 மணியளவில் முடிவடைந்தது.

தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், எல்.முருகன் ஆகிய 3 பேரும் மந்திரிகளாக பதவி ஏற்றுள்ளனர். பிரதமருடன் நேற்று பதவி ஏற்றுக்கொண்ட மந்திரிகள் விவரம் வருமாறு:-

கேபினட் மந்திரிகள்

1. ராஜ்நாத் சிங்

2. அமித்ஷா

3. நிதின்கட்காரி

4. ஜே.பி.நட்டா

5. சிவராஜ் சிங் சவுகான்

6. நிர்மலா சீதாராமன்

7. ஜெய்சங்கர்

8. மனோகர் லால் கட்டார்.

9. எச்.டி.குமாரசாமி.

10. பியூஷ் கோயல்

11. தர்மேந்திர பிரதான்

12. ஜித்தன் ராம் மஞ்சி

13. ராஜீவ் ரஞ்சன் சிங்

14. சர்பானந்த் சோனாவால்

15. வீரேந்திர குமார்

16. ராம் மோகன் நாயுடு

17. பிரகலாத் ஜோஷி

18. ஜூவல் ஓரம்.

19. கிரிராஜ் சிங்

20.அஷ்வினி வைஷ்ணவ்

21. ஜோதிர் ஆதித்ய சிந்தியா.

22. பூபேந்திர யாதவ்

23. கஜேந்திர சிங் செகாவத்

24. அன்னபூர்ணா தேவி.

25. கிரண் ரிஜூஜூ

26. ஹர்தீப் சிங் புரி

27 மன்சுக் மாண்டவியா

28. கிஷன் ரெட்டி.

29. சிராக் பாஸ்வான்.

30 சி.ஆர்.பாட்டில்.

ராஜாங்க மந்திரிகள் (தனிப்பொறுப்பு)

1. இந்திர ஜித் சிங்.

2. ஜிதேந்திர சிங்

3. அர்ஜூன் ராம் மேக்வால்.

4. பிரதாப் ராவ் ஜாதவ்.

5. ஜெயந்த் சாங்க்வி.

ராஜாங்க மந்திரிகள்

1. நிதின் பிரசாத்

2. ஸ்ரீபாத் நாயக்

3. பங்கஜ் சவுத்ரி.

4. கிருஷ்ணன்பால்.

5. ராம்தாஸ் அத்வாலே.

6. ராம்நாத் தாகூர்.

7. நித்யானந்த் ராய்

8. அனுப்பிரியா பட்டீல்

9. வி.சோமண்ணா,

10. சந்திரசேகர பொம்மசானி.

11. எஸ்.பி.சிங் பாகல்.

12. ஷோபா கரந்தலாஜே.

13. கீர்த்தி வர்த்தன் சிங்.

14. பி.எல்.வர்மா.

15. சந்தனு தாகூர்.

16. சுரேஷ் கோபி.

17. எல்.முருகன்.

18. அஜய் தம்தா.

19. சஞ்சய் குமார்.

20. பாகிராம் சவுத்ரி.

21. சதீஷ் சந்திர துபே.

23. சஞ்சய் சேட்

24. ரவ்னீத் சிங்.

25. துர்காதாஸ் உய்கி

26. ரக்சா நிகில் கட்சே

27. சுகாந்து மஜூம்தார்

28. சாவித்திரி தாக்கூர்

29. தோஹன் சாகு

30. ராஜ்பூஷன் சவுத்திரி

31. பூபதி ராஜூஸ்ரீநிவாஸ் வர்மா

32. ஹர்ஷ் மல்ஹோத்ரா

33. நிமுபென் பாம்பனியா

34. முரளிதர் மொஹோல்

35. ஜார்ஜ் குரியன்

36. பவித்ரமார்கரீட்டா


Next Story
  • chat