மத்திய மந்திரிசபையில் மாற்றம்: 3 மத்திய மந்திரிகள் ராஜினாமா

நரேந்திர சிங் தோமர், பிரகலாத் சிங் படேல் மற்றும் ரேணுகா சிங் ஆகியோரின் ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு உடனடியாக ஏற்றுக்கொண்டார்.
மத்திய மந்திரிசபையில் மாற்றம்: 3 மத்திய மந்திரிகள் ராஜினாமா
Published on

புதுடெல்லி,

சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல்களில் மத்திய மந்திரிகள் மற்றும் எம்.பி.க்கள் சிலரை பா.ஜனதா, வேட்பாளர்களாக நிறுத்தியது. இதில் பலரும் வெற்றி பெற்றனர். இதைத்தொடர்ந்து அவர்கள் தங்கள் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர்.

இதில் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் சிங் படேல், ரேணுகா சிங் சரூடா ஆகிய 3 மந்திரிகளின் ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி மாளிகை நேற்று செய்திக்குறிப்பு வெளியிட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து மத்திய மந்திரிகள் சிலரின் இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட்டன. அதன்படி பழங்குடியினர் நலத்துறை மந்திரி அர்ஜூன் முண்டா வேளாண் துறையை கூடுதலாக கவனிப்பார்.

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப இணை மந்திரியான ராஜீவ் சந்திரசேகர், ஜல்சக்தி துறை இணை மந்திரியாகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

வேளாண்துறை இணை மந்திரி சோபா கரண்டலே, உணவு பதப்படுத்துதல் துறை இணை மந்திரி பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளார். சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவின் பவாருக்கு பழங்குடியினர் நலத்துறை இணை மந்திரி பொறுப்பும் கூடுதலாக ஒதுக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com