பிரதமர் மோடி 21-ம் நூற்றாண்டின் அம்பேத்கார் - உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர ராவத்

பிரதமர் மோடி 21-ம் நூற்றாண்டின் அம்பேத்கார் என உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி 21-ம் நூற்றாண்டின் அம்பேத்கார் - உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர ராவத்
Published on

டேராடூன்,

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளதை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. 10 சதவீத இட ஒதுக்கீடு அறிவிப்பை வரவேற்ற உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகர்வு, அனைத்து தரப்பு வளர்ச்சிக்கான நடவடிக்கையாகும் என கூறியுள்ளார்.

பிரதமர் மோடி 21-ம் நூற்றாண்டின் அம்பேத்கார் என பாராட்டியுள்ள திரிவேந்திர சிங் ராவத், பிரதமர் மோடியே ஏழை பெற்றோரின் மகன் என்பதால், சமுதாயத்தில் அனைத்து தரப்பிலும் உள்ள ஏழைகளை பற்றி சிந்திக்கிறார் எனவும் கூறியுள்ளார். பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் தரப்பில் நீண்ட காலமாக இட ஒதுக்கீடு கேட்கப்பட்டது, இப்போது அது நடக்க உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com