

புதுடெல்லி,
ஜிஎஸ்டி வரி குறித்து ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
மோடி ஜி, ஜிஎஸ்டி பயங்கரவாத கப்பார்சிங் வரி உலக அளவில் விமர்சிக்கப்படுகிறது. இது உலகிலேயே உயர்ந்த வரிகளில் 2-வது இடத்தை பிடித்துள்ளது. மிகவும் மோசமானதில் இதுவும் ஒன்று என்று உலக வங்கி கூறியுள்ளது.
இவ்வாறு ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.