ஜெர்மனி பிரதமருடன் மோடி தொலைபேசியில் பேச்சு

ஜெர்மனி உடனான இந்தியாவின் கூட்டு உறவை மேலும் வலுப்படுத்த உறுதிபூண்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜெர்மனி பிரதமருடன் மோடி தொலைபேசியில் பேச்சு
Published on

புதுடெல்லி,

பிரதமர் மோடி நேற்று ஜெர்மனி பிரதமர் பிரைட்ரிச் மெர்சை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, இருநாட்டு உறவு மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து கருத்து பரிமாற்றம் செய்து கொண்டனர். இதுகுறித்து பிரதமர் மோடி 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

“ஜெர்மனி பிரதமருடன் ஆக்கப்பூர்வமான உரையாடலில் ஈடுபட்டேன். இந்தியாவும், ஜெர்மனியும் 75 ஆண்டுகால தூதரக உறவை கொண்டாடுகின்றன. வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, தூய எரிசக்தி, நவீன தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவற்றில் எங்கள் கூட்டு உறவை மேலும் வலுப்படுத்த நாங்கள் உறுதிபூண்டோம்.

ஐரோப்பாவுடனான இந்தியாவின் தொடர்புக்கு ஜெர்மனி முக்கியமான தூண் ஆகும். உலக அமைதி, நிலைத்தன்மை, வளம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் மதிப்புமிக்க கூட்டாளியாக கருதுகிறோம்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com