குழந்தைகளின் செலவுகளுக்கு மாதம் ரூ.4000 - பிரதமர் மோடி உறுதி

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் அன்றாட செலவுகளுக்கு மாதம்தோறும் ரூ4 ஆயிரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
குழந்தைகளின் செலவுகளுக்கு மாதம் ரூ.4000 - பிரதமர் மோடி உறுதி
Published on

புதுடெல்லி,

பாஜக ஆட்சி அமைந்து 8 ஆண்டுகள் நிறைவு செய்வதை முன்னிட்டு பிரதமர் இன்று பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார். வீடியோ கான்பரன்ஸ் மூலம் பி.எம்.கேர்ஸ் பார் சில்ரன்ஸ் என்ற குழந்தைகள் காப்பதற்கென ஒரு புதிய திட்டத்தை துவக்கி வைத்து அவர் பேசியதாவது :

பெற்றோர் வழங்கிய அன்பையும், பராமரிப்பையும் யாராலும் ஈடு செய்து விட முடியாது. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இந்தியத் தாய் துணை நிற்கும்.நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் துணை நிற்கிறார்கள்.

தொற்றுநோய்களின் போது மருத்துவமனைகளைத் தயாரிப்பதற்கும், வென்டிலேட்டர்களை வாங்குவதற்கும், ஆக்ஸிஜன் ஆலைகளை அமைப்பதற்கும் பி.எம்.கேர்ஸ் நிதி பெரிதும் உதவியது. இதனால் பல உயிர்களை காப்பாற்ற முடியும். நம்மை விட்டுச் சென்றவர்கள், இன்று இந்த நிதி அவர்களின் குழந்தைகளுக்காக, உங்கள் அனைவரின் எதிர்காலத்திற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆயூஸ்மான் ஹெ ல்த் கார்டு மூலம் குழந்தைகள் சிகிச்சைக்காக ரூ. 5 லட்சம் வழங்கப்படுகிறது.

குழந்தைகளின் அன்றாட செலவுகளுக்கு மாதம்தோறும் 4 ஆயிரம் வழங்க ஏற்பாடு செய்யப்படும். கொரோனாவல் பெற்றோரை இழந்த 18 முதல் 23 வயதுடைய குழந்தைகளுக்கு இந்தத் திட்டம் உதவும். மாதாந்திர உதவித்தொகையுடன் அவர்களுக்கு 23 வயதாகும் போது ரூ.10 லட்சம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com