மோடி பதவியேற்பு விழா; சோனியா மற்றும் ராகுல் காந்தி வருகை

பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவிற்கு காங்கிரஸ் கட்சி தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி வருகை தந்துள்ளனர்.
மோடி பதவியேற்பு விழா; சோனியா மற்றும் ராகுல் காந்தி வருகை
Published on

புதுடெல்லி,

நாட்டின் பிரதமராக 2வது முறையாக நரேந்திர மோடி இன்று பதவியேற்க இருக்கிறார். டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் இரவு 7 மணிக்கு நடைபெறும் இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், உலக நாடுகளின் தலைவர்கள் உள்பட பல்வேறு முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த விழாவில் பங்கேற்க காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் வருகை தந்துள்ளனர். இதேபோன்று இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பா.ஜ.க.வை சேர்ந்த முக்கிய பிரமுகர்களான ரவி சங்கர் பிரசாத், அமித் ஷா, ஹர்சிம்ரத் கவுர் பாதல், முன்னாள் வெளியுறவு துறை செயலாளர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட பிற தலைவர்களும் வருகை தந்துள்ளனர்.

டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால், பீகார் முதல் மந்திரி நிதீஷ் குமார் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் விழாவிற்கு வந்துள்ளனர்.

இதேபோன்று தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் வருகை தந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com