மோடி கூட்டத்தில் பதற்றம்; நெரிசலில் சிக்கி பலர் காயம் - 14 நிமிடத்தில் பிரதமர் பேச்சை முடித்துக் கொண்டார்

பிரதமர் மோடி கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்தனர். இதனால் பிரதமர் தனது பேச்சை 14 நிமிடத்தில் முடித்துக் கொண்டார்.
மோடி கூட்டத்தில் பதற்றம்; நெரிசலில் சிக்கி பலர் காயம் - 14 நிமிடத்தில் பிரதமர் பேச்சை முடித்துக் கொண்டார்
Published on

தாகூர்நகர்,

பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்காள மாநிலம் வடக்கு பர்கானாஸ் மாவட்டம் தாகூர்நகரில் நடந்த கூட்டத்தில் பேசும்போது மைதானம் நிரம்பி வழிந்தது. வெளியே நின்றிருந்த ஏராளமானோர் மைதானத்துக்குள் வர முயன்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. மைதானத்துக்குள் இருந்தவர்கள் பெண்கள் நிற்பதற்கு இடம் கொடுக்க வசதியாக நாற்காலிகளை மேடை முன்புறம் இருந்த காலி இடத்தில் தூக்கி வீசினர்.

அனைவரும் அவர்கள் இடத்திலேயே நிற்க வேண்டும் என்று மோடி கேட்டுக்கொண்டாலும், அதனை யாரும் கேட்கவில்லை. இதனால் பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் நெரிசலில் சிக்கி காயம் அடைந்தனர். இந்த பதற்றம் காரணமாக மோடி 14 நிமிடங்களில் பேச்சை முடித்துக்கொண்டு புறப்பட்டு சென்றார்.

இந்த சம்பவம் கடந்த ஆண்டு மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் மேடை சரிந்து பலர் காயமடைந்ததை நினைவுபடுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com