அடுத்த மாதம் 3-வது வாரத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்..?

அடுத்த மாதம் 3-வது வாரத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறுமா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் (ஜூலை) 3-வது வாரம் தொடங்கக்கூடும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

சுமார் ஒரு மாதம் நடைபெறும், 20 அமர்வுகள் கொண்ட இந்த கூட்டத்தொடர், சுதந்திர தினத்துக்கு முன்பு முடிவடையும்.

இந்த மழைக்கால கூட்டத்தொடர், பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கி, பிற்பகுதியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு மாறக்கூடும் என்று அந்த வட்டாரங்கள் கூறின.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com