நிலவின் தரைக்கு நிகரான பெங்களூரு சாலைகள் -ஓவியரின் வித்தியாசமான வீடியோ

கர்நாடகாவை சேர்ந்த ஓவியர் படால் நஞ்சுண்டசாமி எடுத்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நிலவின் தரைக்கு நிகரான பெங்களூரு சாலைகள் -ஓவியரின் வித்தியாசமான வீடியோ
Published on

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள துங்கா நகர் பிரதான சாலையில், ஒருவர் விண்வெளி வீரர் போல நடந்து சென்ற வீடியோ காட்சி அது. பள்ளம் மேடாக காட்சியளிக்கும் சாலைகளின் நிலையை எடுத்துக்காட்டும்  விதமாக, அந்த நபர் விண்வெளி வீரர் போல உடையணிந்து தலைகவசம் அணிந்து செல்கிறார்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், இந்த சாலையில் நமது விண்வெளி வீரர்களுக்கு இஸ்ரோ பயிற்சி அளிக்கும் நிலையில், 2022-ஆம் ஆண்டில் நிலவில் தரையிறங்கும் நமது முயற்சி நிச்சயம் வெற்றி பெறும் என்ற ரீதியில் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com