வந்தே பாரத் திட்டம்: ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 5-ம் கட்ட சேவை தொடக்கம்

வந்தே பாரத் திட்டத்தின் கீழ், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 5-ம் கட்ட சேவை தொடங்க உள்ளது.
வந்தே பாரத் திட்டம்: ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 5-ம் கட்ட சேவை தொடக்கம்
Published on

புதுடெல்லி,

வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சொந்த ஊர்களுக்கு அழைத்து வரப்படுகின்றனர். தற்போது உள்நாட்டு விமான சேவையும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியின் 5-ம் கட்டம் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவிக்கையில், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இதுவரை 8.14 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலமாக திருப்பி அழைத்து வரப்பட்டனர். மே.,6 முதல் 8,14,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பல்வேறு வழிகளில் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இவற்றில் 2,70,000 பேர் 53 நாடுகளில் இருந்து ஏர் இந்தியா உள்ளிட்ட விமானங்கள் வழியாக இந்தியா திரும்பினர். பலர் கப்பல்கள் மூலமாகவும் அழைத்து வரப்பட்டனர் என்று கூறினார்.

மேலும், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் 5 வது கட்டமாக இந்தியர்களை மீண்டும் அழைத்து வரவும் மத்திய அரசு தயாராகி வருகிறது. 5ம் கட்ட டிக்கெட் முன்பதிவு குறித்த விவரங்களை ஏர் இந்தியா மற்றும் பிற விமான நிறுவனங்கள் விரைவில் பகிர்ந்து கொள்ளும்.

5 வது கட்டத்தின்படி, இந்தியாவை அமெரிக்கா, கனடா, கத்தார், ஓமான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், லண்டன், பிராங்பேர்ட், பாரிஸ், சவுதி அரேபியா, பஹ்ரைன், நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுடன் இணைக்கும். பல்வேறு நாடுகளில் சிக்கி தவிக்கும் ஒவ்வொரு இந்தியரும் இந்த திட்டத்தின் மூலமாக மீட்கப்படுவதற்கான நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 5-ம் கட்டத்தில் கூடுதல் இடங்களும், விமானங்களும் இணைக்கப்பட உள்ளன என்றும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com