

ஐதராபாத்,
தெலுங்கானா மாநில முதல்- மந்திரியும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர் ராவின் மகள் கவிதா நிஜாமாபாத் நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். நிஜாமாபாத்தில் மஞ்சள் விவசாயிகள் அதிகமானோர் உள்ளனர். அவர்கள் ஏற்கனவே மஞ்சளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும், நிஜாமாபாத்தில் தேசிய மஞ்சள் வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்திவந்தனர். ஆனாலும் இன்னும் கோரிக்கை நிறைவேறவில்லை.
எனவே இந்த கோரிக்கையை வலியுறுத்தி நிஜாமாபாத் தொகுதியில் 250-க்கும் மேற்பட்ட மஞ்சள் விவசாயிகள் மனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று முன்தினம் மட்டுமே 245 விவசாயிகள் மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் ஏற்கனவே நரேந்திரமோடி, ராகுல் காந்தி ஆகியோரை எதிர்த்து ஆயிரம் பேர் மனு தாக்கல் செய்வோம் என்று அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.