பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் நீடிப்பு

பெட்ரோல், டீசல் விலையில் ஏறக்குறைய ஒருவாரத்திற்கும் மேலாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. #PetrolPrice
பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் நீடிப்பு
Published on

சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்படுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன், பெட்ரோல், டீசல் விலை தினமும் ஏறுமுகமாகவே இருந்தது. இதனால், வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.

இதையடுத்து, பெட்ரோல், டீசல் விலை பைசாக்களில் குறைக்கப்பட்டது. இந்த சூழலில், ஒருவாரத்திற்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் உள்ளது.

இன்று (ஜூலை-5) சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.78.40 காசுகளாக விற்பனை ஆகிறது. டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.71.12 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com