

பெங்களூரு:
கர்நாடக அரசு கிரகஜோதி திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு மாதம் தலா 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் பயன் பெற பொதுமக்கள் சேவா சிந்து இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதனால் பொதுமக்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து வருகிறார்கள். கர்நாடகத்தில் இதுவரை 70 லட்சத்து 5 ஆயிரத்து 892 பேர் விண்ணப்பித்துள்ளனர். மாநிலத்தில் மொத்தம் 2 கோடியே 16 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.