

ஒரு தாய் தனது மகனின் பட்டமளிப்பு விழாவைக் கண்டு பெருமைப்படுவது சாதாரணம். ஆனால், அதே மேடையில், அதே விழாவில், மகனுடன் சேர்ந்து பட்டம் பெற்றால்? அப்படிப்பட்ட அரிய தருணத்தையே உருவாக்கியுள்ளனர். வயது என்பது கற்றலுக்கு ஒருபோதும் தடையல்ல என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
ஜிகிஷா டெய்லர் (45) மகன் ஆதித்யா கபாடியா (21) இருவரும் ஒன்றாக பட்டம் பெற்ற புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
ஜிகிஷா, குஜராத் மாநிலம் பரூச் பகுதியில் இயங்கி வரும் பொறியியல் கல்லூரியில் 16 ஆண்டுகளாக பேராசிரியராகப் பணியாற்றி வந்தார்.
சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு, மகன் கபாடியா ஐஐடி சென்னையில் ஆன்லைன் மூலம் பிஎஸ் டேட்டா சயின்ஸ் படிப்பில் சேர்ந்தார். எந்தக் கல்லூரியாக இருந்தாலும் கொரோனா காலம் என்பதால் ஆன்லைன் மூலம்தான் படிக்க வேண்டும்.
மேலும், இதனை நான்கு ஆண்டு காலம் கல்லூரியில் பயிலும் படிப்பாகவே சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மகள் ஜிகிஷாவும் இதில் இணைந்துள்ளார். நீண்ட காலம் கழித்து, புதிய பாடங்களை பயில்வது சற்று கடினமாக இருந்தாலும், மகனுடன் போதிய நேரம் ஒதுக்கி படித்திருக்கிறார்.
சக மாணவர்களும் ஒரு குழுவாக அமைத்துக்கொண்டு படிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கும்பத்தினரும் கொடுத்த ஊக்கத்தோடு படித்துமுடித்து தற்போது மகனுடன் சேர்ந்து பட்டம் பெற்றிருக்கிறார். தாய், உந்துதலோடு படிப்பதைப் பார்த்து ஆதித்யாவுக்கும் பெரும் ஊக்கம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் ஒன்றாக நேரத்தை செலவிட ஆரம்பித்தோம். இது எங்களுக்கு மிகவும் நன்றாக அமைந்திருந்தது.
எனவே படிக்கவும் புதிய கலைகளை கற்கவும் வயது ஒன்றும் தடையில்லை என்பதை தாய் ஜிகிஷா நிரூபித்துள்ளார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மாணவியாக மாறியது எளிதாக இருக்கவில்லை."ஆரம்பத்தில் கணிதமும் புள்ளியியலும் மிகவும் கடினமாக இருந்தது. இரண்டு, மூன்று வாரங்களுக்குப் பிறகு பழகிவிட்டேன்," என்று ஜிகிஷா கூறுகிறார்.படிப்பை முடிக்க அவர் கடுமையான ஒழுக்கத்தைப் பின்பற்றினார்.
"நான் அதிகாலை 4:30 மணிக்கு எழுந்து, காலை ஏழு மணிக்குள் எனது படிப்பை முடித்துவிடுவேன். அதன்பின் வீட்டு வேலைகளைக் கவனிப்பேன், மதியத்திற்கு மேல் மீண்டும் படிப்பில் கவனம் செலுத்துவேன்," என்கிறார் ஜிகிஷா.
"அம்மா எப்படி ஒழுங்காக படித்தார், எவ்வளவு கடினமாக உழைத்தார் என்பதைப் பார்த்து நானும் ஊக்கமடைந்தேன். இந்தப் படிப்பு எங்களை இன்னும் நெருக்கமாக்கியது. எப்போதும் கற்றுக்கொண்டே இருக்கும் என் அம்மாவின் இன்னொரு முகத்தை நான் பார்த்தேன்," என்று அவர் பெருமையுடன் கூறுகிறார்.