பணத்தகராறில் தாய் கொலை... டிரைவர் கைது


பணத்தகராறில் தாய் கொலை... டிரைவர் கைது
x
தினத்தந்தி 15 Feb 2025 10:42 AM IST (Updated: 15 Feb 2025 11:16 AM IST)
t-max-icont-min-icon

இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

புதுடெல்லி,

டெல்லியின் தயால்பூர் பகுதியை சேர்ந்தவர் சோனு(40). இவருடைய தாய் கொலை செய்யப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பின்னர் அங்கு வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இறந்தவரின் மகன் டிரைவராக வேலை செய்து வந்த நிலையில் தற்போது வேலையில்லாமல் இருப்பதால் போதைக்கு அடிமையானதாக தெரியவந்தது.

மேலும் சோனு அடிக்கடி தனது தாயிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது தகராறு முற்றிய நிலையில் சோனு தனது தாயினை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சோனுவை கைது செய்த போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story