குப்பை கொட்ட செல்வதாக கணவரிடம் கூறிவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய 2 குழந்தைகளின் தாய்

வீட்டின் அருகே சலூன் கடை நடத்திய பிரபுவுடன் பிரியாவுக்கு பழக்கம் ஏற்பட் டது.
குப்பை கொட்ட செல்வதாக கணவரிடம் கூறிவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய 2 குழந்தைகளின் தாய்
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு பாகலகுண்டே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் சரத்குமார். இவருக்கும், பிரியா என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சரத்குமார் தனியார் நிறுவன ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதி முதலில் கிரிநகரில் வாடகை வீட்டில் வசித்தனர். அப்போது வீட்டின் அருகே சலூன் கடை நடத்திய பிரபுவுடன் பிரியாவுக்கு பழக்கம் ஏற்பட் டது.

அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இது பற்றி சரத்குமாருக்கு தெரியவந்ததும், தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் 2 பேரின் குடும்பத்தினரும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி தம்பதியை சேர்த்து வைத்தனர். இதையடுத்து, கிரிநகரில் இருந்து பாகலகுண்டேவுக்கு தனது குடும்பத்துடன் வந்து சரத்குமார் தங்கி இருந்துள்ளார்.

ஆனாலும் பிரபுவுடன் உள்ள கள்ளத்தொடர்பை பிரியா கைவிடாமல் இருந்துள்ளார். இதற்கிடையே, குப்பை கழிவுகளை கொட்டி விட்டு வருவதாக கணவரிடம் கூறிவிட்டு பிரியா வெளியே சென்றுள்ளார். ஆனால் அவர் திரும்பி வரவில்லை. மறுநாள் காலையில் சரத்குமார் எழுந்து பார்த்தபோது மனைவி வீட்டில் இல்லாததால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

சரத்குமார். 2 குழந்தைகளுக்கு உணவில் தூக்க மாத்திரைகளை கலந்துகொடுத்து விட்டு பிரியா கள்ளக்காதலனுடன் ஓடிவிட்டது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது குப்பை கழிவுகள் அடங்கிய பாலிதீன் பையுடன், மற்றொரு பையையும் பிரியா எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

தனது மனைவி கள்ளக்காதலன் பிரபுவு டன் வீட்டை விட்டு ஓடிப்போய் விட்டதாக கூறி பாகலகுண்டே போலீசில் சரத்குமார் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்ப திவு செய்து பிரபு, பிரியாவை வலைவீசி தேடிவருகிறார்கள். தாய் இல்லாததால் சரத்குமாரின் 2 குழந்தைகளும் பரிதவித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com