மகனுடன் சேர்ந்து 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தாய்

பண்டாரு லட்சுமி லஹரி என்பவர் திருமணத்துக்கு முன்பே 10-ம் வகுப்பு படிப்பை நிறுத்தியிருந்தார்.
மகனுடன் சேர்ந்து 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தாய்
Published on

நகரி,

ஆந்திராவில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டன. இதில் மேற்கு கோதாவரி மாவட்டம் பாலகொல்லு மண்டலம் பூலப்பள்ளியை சேர்ந்த தாய் மகன் இருவரும் ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற்று கவனம் ஈர்த்துள்ளனர். பண்டாரு லட்சுமி லஹரி என்பவர் திருமணத்துக்கு முன்பே 10-ம் வகுப்பு படிப்பை நிறுத்தியிருந்தார்.

அவரது மகன் சரண் விஜய், பூலப்பள் ளியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கல்வி மீது இருந்த ஆர்வம் காரணமாக லட்சுமி லஹரி. 10-ம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுதினார். நேற்று முன்தினம் தேர்வு முடிவு வெளியானதில் தாய் - மகன் இருவரும் ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற் றனர். இதற்கு குடும்பத்தினர், ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com