மோட்டார் சைக்கிள்-கார் மோதல்; விவசாயி சாவு

ஒலல்கெரேயில் மோட்டார் சைக்கிள்-கார் மோதலில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
மோட்டார் சைக்கிள்-கார் மோதல்; விவசாயி சாவு
Published on

சிக்கமகளூரு-

சித்ரதுர்கா மாவட்டம் ஒலல்கெரே தாலுகா சித்ரவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரகுவீர் (வயது 28). விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது கிராமத்தின் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ரகுவீர், தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஒலல்கெரே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஒலல்கெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com