மோட்டார் சைக்கிள்- கார் மோதல்: தனியார் வங்கி ஊழியர் சாவு

மோட்டார் சைக்கிள்- கார் மோதயதில் தனியார் வங்கி ஊழியர் இறந்தார்.
மோட்டார் சைக்கிள்- கார் மோதல்: தனியார் வங்கி ஊழியர் சாவு
Published on

மைசூரு-

மைசூரு மாவட்டம் உன்சூர் (தாலுகா) டவுன் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது26). இவர் உன்சூரில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இ்ந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு மஞ்சுநாத் தனது அக்கா மகளுடன் மோட்டார் சைக்கிளில் உன்சூர் டவுனுக்கு சென்றார்.

அப்போது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உன்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மஞ்சுநாத் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து உன்சூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com