1,000 அடி உயரத்தில் இருந்து விழுந்த மலையேற்ற பயிற்சி வீரர் பலி

தனது நண்பர்களுடன் நாசிக்கில் உள்ள பிரம்மகிரி மலைக்கு மலையேற்ற பயிற்சிக்காக சென்றிருந்தார்.
1,000 அடி உயரத்தில் இருந்து விழுந்த மலையேற்ற பயிற்சி வீரர் பலி
Published on

மும்பை,

மும்பை செம்பூர் திலக்நகரை சேர்ந்தவர் பிரனவ் தார்மாசே (வயது26). மலையேற்ற பயிற்சி வீரரான இவர், தனது நண்பர்களுடன் நாசிக்கில் உள்ள பிரம்மகிரி மலைக்கு மலையேற்ற பயிற்சிக்காக சென்றிருந்தார். நேற்று முன்தினம் காலை 10 மணி அளவில் நந்தி குண்ட் அருகே மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்ட போது, திடீரென அவருக்கு பிடி நழுவியது. இதனால் அவர் 1,000 அடி உச்சத்தில் இருந்து கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து பலியானார்.

இது பற்றி அறிந்த மீட்பு படையினர் அங்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மதியம் 2 மணி அளவில் முக்தா தேவி கோவில் அருகே கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com