மத்தியபிரதேசம்: நிலக்கரி சுரங்கம் இடிந்து விபத்து - 2 பேர் பலி

4 ஊழியர்கள் படுகாயமடைந்தனர்.
மத்தியபிரதேசம்: நிலக்கரி சுரங்கம் இடிந்து விபத்து - 2 பேர் பலி
Published on

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் ஷாதுல் மாவட்டம் பங்வாரி பகுதியில் நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலக்கரி சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நிலக்கரி சுங்கத்தில் இன்று அதிகாலை ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நிலக்கரி சுரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் நிலக்கரி சுரங்க இடிபாடுகளுக்குள் சிக்கி 2 ஊழியர்கள் உயிரிழந்தனர். மேலும், 4 ஊழியர்கள் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்த 4 ஊழியர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com