ம.பி.: படகு கவிழ்ந்து 4 பேர் பலி; 15 பேர் மீட்பு

படகு விபத்தில் சிக்கிய 10 பேரை காணவில்லை. அவர்களை கண்டறியும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.
ம.பி.:  படகு கவிழ்ந்து 4 பேர் பலி; 15 பேர் மீட்பு
Published on

ஜபல்பூர்

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் நகரில் நர்மதா ஆற்றின் மீது பார்கி அணை கட்டப்பட்டு உள்ளது. இந்த அணையில் சுற்றுலாவாசிகள் சிலர் படகில் சென்றுள்ளனர்.

அப்போது பலத்த காற்று வீசியதில், படகு கவிழ்ந்தது. இதில், சிக்கி 4 பேர் பலியானார்கள். 18 பேர் வரை மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு, முதல்-மந்திரி மோகன் யாதவ் இரங்கல் தெரிவித்ததுடன், மீட்பு பணிகளை விரைவுப்படுத்தும்படி அதிகாரிகளிடம் கேட்டு கொண்டார்.

பொதுப்பணி துறை மந்திரி ராகேஷ் சிங், சுற்றுலா மந்திரி தர்மேந்திர சிங் லோதி, மூத்த அதிகாரிகள், போலீசார் மீட்பு பணியை பார்வையிட சென்றுள்ளனர். விபத்தில் சிக்கிய 10 பேரை காணவில்லை. அவர்களை கண்டறியும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com