ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் சீதைக்கு கோவில் கட்டுவோம் - மத்தியபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வாக்குறுதி

ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் சீதைக்கு கோவில் கட்டுவோம் என மத்தியபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

போபால்,

இந்த ஆண்டு இறுதிக்குள் 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. மத்திய பிரதேசத்தில் அடுத்த மாதம்(நவம்பர்) 17-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளநிலையில் தேர்தல்களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்தநிலையில் காங்கிரசின் முதல்-மந்திரி வேட்பாளர் கமல்நாத் பிரசாரத்தை எக்ஸ் தளம் வாயிலாக தொடங்கியுள்ளார்.

தசரா பண்டிகை வாழ்த்துகளை கூறிய அவர் தனது வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

"இந்த புனித பண்டிகையான விஜயதசமியில், மத்தியபிரதேச மக்களுக்கு, காங்கிரஸ் ஆட்சியில் நம்பிக்கை மற்றும் கலாசாரத்தை உயர்த்த எந்த எல்லைக்கும் செல்வோம் என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கிடப்பில் உள்ள இலங்கையில் சீதை கோவில் கட்டும் திட்டம் தொடங்கப்படும், மேலும் கோவில் அர்ச்சகர்களின் உதவித்தொகை உயர்வு, கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு, கோவில் சொத்துகள் பராமரிப்பு" ஆகியவை மேற்கொள்ளப்படும் என்றார். மேலும் மோ நகரில் அம்பேத்கர் நினைவு சின்னம் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com