சாமியார் ராம்பாலின் சீடர்கள் ஏற்பாடு செய்த திருமண விழாவில் துப்பாக்கி சூடு: ஒருவர் உயிரிழப்பு

மத்தியப் பிரதேசத்தில் சாமியார் ராம்பாலின் சீடர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண விழாவில் புகுந்த சிலர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார்.
சாமியார் ராம்பாலின் சீடர்கள் ஏற்பாடு செய்த திருமண விழாவில் துப்பாக்கி சூடு: ஒருவர் உயிரிழப்பு
Published on

போபால்,

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்தவர் சாமியார் ராம்பால். கொலைக் குற்றச்சாட்டில் ராம்பால் தற்போது ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். அவரது பெயரால் நடத்தப்படும் திருமணம் இந்து மதத்திற்கு எதிரானது என ஒரு சாரார் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் போபால் நகரில் ராம்பாலின் சீடர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண விழாவில் புகுந்த சிலர் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டபடி துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் தேவிலால் மீனா என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக 11 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com