

ராஞ்சி,
ஜார்க்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களில் 2025-26 நிதியாண்டில் வருமான வரித்துறை சுமார் ரூ.20 ஆயிரம் கோடி வரி வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு மாநிலங்களையும் சேர்த்து பார்க்கும்போது. முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் எம்.எஸ்.தோனி தனிநபராக அதிக வரி செலுத்தியதில் முதல் இடம் பிடித்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2025-26 நிதியாண்டில் ஜார்க்கண்டிலிருந்து மட்டும் ரூ.12 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது என்று பீகார்-ஜார்க்கண்ட் வருமான வரித்துறையின் ' முதன்மை தலைமை ஆணையர் டாக்டர் டி.சுதாகர ராவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மொத்த வரி வசூலில் சுமார் 70 சதவீதம் 'டிடிஎஸ்' மூலம் கிடைத்ததாகவும் அவர் கூறினார். மகேந்திர சிங் தோனி அதிக வரி செலுத்திய தனிநபராக இருந்தாலும் அவர் செலுத்திய வரி தொகையை வெளியிடப்படவில்லை.
பீகார் மற்றும் ஜார்க்கண்டில் சேர்த்து சுமார் 5.5 கோடி பேர் பான் கார்டுதாரர்கள் உள்ளனர் என்றும், 40 லட்சம் பேர் மட்டுமே வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.