உலக அளவில் மாற்றங்களை ஏற்படுத்திய 25 சாதனையாளர்கள் கொண்ட போர்ப்ஸ் பட்டியலில் முகேஷ் அம்பானி

உலகளவிலான மாற்றங்களை ஏற்படுத்தி சாதனை புரிந்தவர்கள் பற்றி போர்ப்ஸ் வெளியிட்ட 25 பேர் கொண்ட பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி இடம் பெற்றுள்ளார்.
உலக அளவில் மாற்றங்களை ஏற்படுத்திய 25 சாதனையாளர்கள் கொண்ட போர்ப்ஸ் பட்டியலில் முகேஷ் அம்பானி
Published on

நியூயார்க்,

அமெரிக்காவில் உள்ள போர்ப்ஸ் பத்திரிகை நிறுவனம உலகளவில் மாற்றங்கள் ஏற்படுத்தும் 25 சாதனையாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள 2வது வருடாந்திர பட்டியலில் முகேஷ் அம்பானி இடம் பிடித்து உள்ளார்.

இந்த பட்டியலில், வர்த்தக தலைவர்களும் உள்ளனர். அவர்கள் தற்பொழுதுள்ள நிலையில் திருப்தியில்லாதவராக, அதிலிருந்து மேம்படும் வகையில் மற்றும் தங்களது தொழிற்சாலைகளை உருமாற்றுபவராகவும் மற்றும் உலகம் முழுவதுமுள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றி அமைப்பவர்களாக உள்ளவர்கள்.

10 கோடி வாடிக்கையாளர்கள்

இந்தியாவில் உள்ள அதிக எண்ணிக்கையிலான மக்களிடம் இன்டர்நெட்டை கொண்டு சேர்த்த பெருமுயற்சியில் ஈடுபட்டதற்காக முகேஷ் இந்த பட்டியலில் உள்ளார்.

அவரது ரிலையன்ஸ் ஜியோ பற்றி போர்ப்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், எண்ணெய் மற்றும் வாயு நிறுவன தொழிலதிபராக இருந்த அவர், நாட்டின் தொலைதொடர்பு சந்தையில் நுழைந்து மிக மிக குறைந்த விலைகளில் வேகமுடன் கிடைக்க கூடிய இன்டர்நெட வசதியை வழங்கியுள்ளார்.

10 கோடி வாடிக்கையாளர்களை 6 மாதங்களில் பெற்றதுடன், தொலைதொடர்பு சந்தையில் எழுச்சி அலையை ஏற்படுத்தியுள்ளார் என தெரிவித்துள்ளது.

அனைத்தும் டிஜிட்டல்

டிஜிட்டல் இல்லாத இந்தியா என்றில்லாத வகையில், டிஜிட்டல் வழியே செயல்பட கூடிய சாத்தியம் கொண்ட அனைத்தும் டிஜிட்டலில் கிடைக்க செய்தவர் முகேஷ் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தனது சொந்த பங்குதாரர்கள் அல்லது ஊழியர்களை தவிர்த்து மற்றவர்களின் வருங்காலத்தினை தீர்மானிக்கும் உண்மையான செயலாற்றல் கொண்டவர்களை அடையாளம் கண்டு கொள்ளும் பணியில் உள்ளோம் என்று போர்ப்ஸ் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com