ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியல்: மீண்டும் முதலிடத்தை பிடித்தார் முகேஷ் அம்பானி

ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியல்: மீண்டும் முதலிடத்தை பிடித்தார் முகேஷ் அம்பானி
Published on

மும்பை

பிரபல சமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக், முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஜியோ நிறுவனத்தில் 9.9 சதவீத பங்குகளை 5.7 பில்லியன் டாலர் தொகைக்கு வாங்கியது. இதன் மூலம், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 49 பில்லியன் டாலர் வரை உயரந்துள்ளது.

இதனால், ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் வகித்த ஜேக் மா- வை பின்னுக்குத் தள்ளிய முகேஷ் அம்பானி, மீண்டும் நம்பர் 1 இடத்தை பிடித்தார். சீனாவின் அலிபாபா குழும தலைவரான ஜேக் மாவை விட 3.2 பில்லியன் அதிக சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com