நாடு முழுவதும் 1,500-க்கு மேற்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் நிறுவப்பட்டுள்ளன - முக்தார் அப்பாஸ் நக்வி தகவல்

பிரதமரின் முயற்சிகளால் நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தி அதிகரித்துள்ளதாக மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 1,500-க்கு மேற்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் நிறுவப்பட்டுள்ளன - முக்தார் அப்பாஸ் நக்வி தகவல்
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள சமூகநல கூடத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

கொரோனா முதலாவது அலை தாக்கியபோது, நம்மிடம் போதிய மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இல்லை. ஆனால், தற்போது வென்டிலேட்டர், ஆக்சிஜன், மருந்துகள், என்-95 ரக முககவசங்கள் என எல்லாவற்றிலும் இந்தியா தன்னிறைவுடன் உள்ளது.

பிரதமரின் வேண்டுகோள் மற்றும் முயற்சிகளால் நாடு முழுவதும் 1,500-க்கு மேற்பட்ட மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதனால் ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com