

லக்னோ,
சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரும் உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான முலாயம்சிங் யாதவ், காசியாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுநீரக பிரச்சினைகள் தொடர்பாக முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, இந்த மாத துவக்கத்திலும் முலாயம் சிங் யாதவ் குருகிராம் மருத்துவமனையில் வழக்கமான உடல் நல பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.